ஜகார்த்தா (25 ஜன 2020): ரியாலிட்டி ஷோ-வுக்கான தேர்வு (ஆடிஷன்) நிகழ்ச்சியில், மகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தபோதே தாய் மரணித்த சம்பவம் பலரது இதயத்தை பிழிவதாக அமைந்துள்ளது.
ஜகர்த்தா : இந்தோனேசியாவில் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக சிறுமி ஒருவர் பாட்டுப் போட்டியில் வென்றதும், அவர் பாடுவதை டிவி.,யில் பார்த்தபடியே தாய் உயிரிழந்த சம்பவம், கேட்போரை கலங்க வைத்துள்ளது.
இந்தோனேசியாவில் லிகா தங்தத் ரியாலிட்டி ஷோ (பாடல் போட்டி) நடந்து வருகிறது இதில் வெல்பவருக்கு 28,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.26 லட்சம்) பரிசாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அறிந்த ஜன்னா என்ற 14 வயது சிறுமி கலந்து கொண்டார். மேலும் அச்சமயத்தில் அவரது தாய் சித்தி உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்தார். உயிருக்குப் போராடும் தனது தாயின் மருத்துவச் செலவுக்கு இந்த போட்டியில் வென்றால் உதவும் என்ற நம்பிக்கையில் ஜன்னா போட்டியில் பங்கேற்றார்.
ஆடிஷனில் கலந்து கொண்ட ஜன்னா போட்டி நடுவர்களிடம் தன் நிலை குறித்தும், தன் தாய் குறித்தும் பேசி உருக வைத்தார். பின்பு பாடலை தொடங்கினார். அப்போது அந்த பாடலை அவரது தாயும் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் போட்டியிலும் செலக்ட் ஆகி தாயிடம் தெரிவிக்க ஜன்னா விரும்பினார். அப்போது, அவரது பாடலை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஜன்னாவின் தாய் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட அந்தச் சிறுமி மேடையிலேயே கதறி அழுதார். இதனைக் கண்டு அரங்கில் இருந்த அனைவரும் கண்ணீர் விட்டனர். நேரலையில் டிவி.,யில் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் இது சோகத்தில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.