அதானி விவகாரம் ஊடகங்களில் வெளியாவதை தடுக்க முடியாது – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!
புதுடெல்லி (25 பிப் 2023): அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை உச்சநீதிமன்றம் தடுக்காது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெளிவுபடுத்தினார். அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை நீதிமன்றம் உத்தரவிடும் வரை நிறுத்தக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், தர்க்கரீதியான வாதங்களை முன்வைக்க மனுதாரரை கேட்டுக் கொண்டுள்ளது. தலைமை நீதிபதி பி.எஸ்.நரசிங்க மற்றும் ஜே.பி.பர்திவாலா…