செய்தியாளர்களிடம் பேசியதை ஏன் தீர்மானமாக்கக் கூடாது? – ஸ்டாலின் சரமாரி கேள்வி!
சென்னை (14 மார்ச் 2020): “என்பிஆர் இப்போதைக்கு செயல்படுத்தப்போவதில்லை என்று அமைச்சர் உதயகுமார் கூறியதை ஏன் சட்டசபையில் தீர்மானமாக்கக் கூடாது?” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டபேரவை நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று கூறியது சட்டசபையில் விவாதமானது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பிஉதயகுமார், “செய்தியாளர்களிடம் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை. என்.பி.ஆரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுபான்மையினரிடையே பதட்டமான சூழல் ஏற்படுத்தும் விதமாக…