
170 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல் – அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்!
புதுடெல்லி (12 மார்ச் 2021): பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் கட்சி தாவி கொண்டிருப்பது அக்கட்சிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அல்லது சிட்டிங் எம்.எல்.க்களின் கட்சி தாவல் அக்கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) கட்சியை விட்டு வெளியேறியவர்களின் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஆர் வெளியிட்ட தரவுகளின்படி, 2016 முதல் 2020 வரை 170 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்…