170 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல் – அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்!

Share this News:

புதுடெல்லி (12 மார்ச் 2021): பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் கட்சி தாவி கொண்டிருப்பது அக்கட்சிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அல்லது சிட்டிங் எம்.எல்.க்களின் கட்சி தாவல் அக்கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) கட்சியை விட்டு வெளியேறியவர்களின் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஆர் வெளியிட்ட தரவுகளின்படி, 2016 முதல் 2020 வரை 170 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பல்வேறு கட்சிகளுக்கு மாறியுள்ளனர்.. 2016 முதல் 2020 வரை பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 405 எம்.எல்.ஏ.க்களில் 182 பேர் பாஜகவுக்குச் சென்றனர். 38 பேர் காங்கிரசில் சேர்ந்தனர், 25 பேர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) சென்றனர். 2019 மக்களவைத் தேர்தலின் போது, ​​ஐந்து மக்களவை எம்.பி.க்கள் பாஜகவை விட்டு வெளியேறினர், ஏழு காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கள் காங்கிரஸை விட்டு வெளியேறியுள்ளனர்..

மத்திய பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவியதால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply