இந்திய வங்கிகளில் ஏடிஎம் பயன்படுத்துவதற்கான செலவு இன்று முதல் உயர்வு!
புதுடெல்லி (01 ஜன 2022): இந்திய வங்கிகளில் ஏடிஎம் பயன்படுத்துவதற்கான செலவு இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் வங்கி ஏ.டி.எம்.களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். பிற வங்கி ஏ.டி.எம்.களில் என்றால் மாநகரங்களில் 3 முறை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஊரகப் பகுதிகள் என்றால் 5 முறை கட்டணம் கிடையாது. அதன் பிறகு பணம் எடுத்தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரி…