மனைவி மீது சந்தேகம் – கழுத்தை நெரித்து மனைவி கொலை!
நாகர்கோவில் (23 அக் 2022): கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி வெனிஸ்டர் (32). இவர் வீடுகளில் அழகு சாதன மரவேலைப்பாடுகளை ஏற்படுத்தும் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி பத்மா (30). ஆண்டனி வெனிஸ்டரும் பத்மாவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 8 வயதிலும், 10 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள்…