சென்னை (09 ஜன 2020): சென்னையில் போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கணவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி நர்மதா சென்னையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் நர்மதாவுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது ஜனார்த்தனனுக்கு தெரிய வந்தது. இதனை தட்டிக் கேட்ட ஜனார்த்தனுக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இரண்டு பிள்ளைகளுக்காக சேர்த்து வைத்த ரூ 5 கோடி சொத்துக்களை அபகரித்துவிட்டதாகவும் நர்மதா மீது ஜனார்த்தன் புகார் அளித்துள்ளார்.