கொரோனாவோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன் – கமலுக்கு சுகாதாரத்துறை கேள்வி!

சென்னை (07 டிச 2021): கொரோனா சிகிச்சைக்குப்பின் நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது குறித்து கமலுக்கு சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பவுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில…

மேலும்...

இந்தியன் 2 படத்தில் நடிகர்கள் அதிரடி மாற்றம்!

சென்னை (15 நவ 2021): இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் இரண்டு மாற்றங்கள் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த படம் இந்தியன். கமல் இரண்டு வேடங்களில் நடித்து கலக்கியிருந்த இதன் இரண்டாம் பாகம் மீண்டும் கமல் நடிக்க விபத்து காரணமாகவும், தயாரிப்பு தரப்பு காரணமாகவும் படபிடிப்பு தடை பட்டிருந்தது. தற்போது ஷங்கர் ராம்சரன் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்தியன் 2…

மேலும்...

இப்படி பேசிடுச்சே அந்த பொண்ணு – சீறிய கமல்!

சென்னை (31 மார்ச் 2021): விஐபி தொகுதியாக பார்க்கப்படுவதில் மிக முக்கியமானது கோவை தெற்கு தொகுதி.. தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே ஸ்டிராங் வேட்பாளர்களால், கணிப்பில் ரொம்ப குழப்பத்தை தந்து வரும் தொகுதி இது.. பிரச்சாரத்தின் துவக்கத்தில் இருந்தே அரசியல் களை கட்டி வரும் தொகுதி இது.. இதுவரை வந்த இத்தனை கருத்து கணிப்புகளில், இங்கு யாருக்கு வெற்றி என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியவில்லை.. அந்த அளவுக்கு வானதி & கமல் இரு ஜாம்பவான்கள் டஃப் தந்து…

மேலும்...

மக்கள் நீதி மய்யத்துடன் இணையும் காங்கிரஸ்?

சென்னை (04 பிப் 2021): திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரசுக்கு 20 இடங்கள் வழங்கப்படலாம் என்ற நிலையில் காங்கிரஸ் அதற்கு சம்மதிக்கவில்லை. விசிக 6 இடங்களை பெற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்…

மேலும்...

ரஜினியிடம் ஆதரவு கோரும் கமல்!

புதுக்கோட்டை (30 டிச 2020): நண்பர் என்கிற முறையில் ரஜினியிடம் ஆதரவு கோரவுள்ளதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபட போவதில்லை என ரஜினி கூறியுள்ள நிலையில் கமல் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல் ஹாசன், “ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து பேசுவேன். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன்…

மேலும்...

லைட் அடிச்சு பார்க்க ஆசை – கமல் விருப்பம்!

சென்னை (27 நவ 2020): தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட டார்ச்லைட் சின்னத்தையே ஒதுக்க வேண்டும்,’ என தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். அதன் பிறகு நடந்த தேர்தல்களில் போட்டியிட, அக்கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, இக்கட்சி தயாராகி வருகிறது….

மேலும்...

பிரபல நடிகர் மீது 4 வழக்குகள் – பரபரப்பை கிளப்பிவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்த நடிகை!

சென்னை (05 அக் 2020): நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தர்ஷன் மீது 4 வழக்குகளை கொடுத்துவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. தமிழ் பட நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டியும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் தர்ஷனும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுவிட்டதாக சனம் கூறியுள்ளார். ஆனால் தர்ஷன், சனம் ஷெட்டியை திருமணம் செய்வதாக கூறி மறுத்துவிட்டதாக கடந்த வருடம் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் நேற்று தொடங்கிய பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியும்…

மேலும்...

கமல் படத்தில் சிம்பு – மாநாடு என்ன ஆச்சு?

சென்னை (01 அக் 2020): கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவன தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடையூறுகளுக்கு இடையே மாநாடு படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். மீண்டும் படப்பிடிப்புகளை துவங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அண்மையில் அனுமதி அளித்தன. ஆனால் மாநாடு படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு…

மேலும்...

டாஸ்மாக்கை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி – கமல் அதிரடி கருத்து!

சென்னை (15 மே 2020): டாஸ்மாக்கை மூட உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் கமல் கருத்து தெரிவித்துள்ளார். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக்கை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை இன்று விசாரித்த உச்ச…

மேலும்...

கமல் விஜய்சேதுபதி இடையே காரசார வார்த்தைப் போர்!

சென்னை (03 மே 2020): கமலின் கருத்துக்கள் புரியவில்லை என்ற விஜய் சேதுபதியின் கேள்விக்கு நடிகர் கமல் காரசாரமாக பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் பேச்சோ அல்லது சமூகவலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துக்களோ பலருக்கும் புரியவில்லை என்ற குறை பல ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருகிறது. மே 1அன்று ஊரடங்கு தொடர்பாக அவர் பதிவிட்ட டுவீட் பலருக்கும் புரியவில்லை என்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே நடிகர் கமல் சில விளக்கங்கள் கொடுத்திருந்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக நேரலையில் பேசினார் கமல். இவரை…

மேலும்...