சென்னை (27 நவ 2020): தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட டார்ச்லைட் சின்னத்தையே ஒதுக்க வேண்டும்,’ என தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு, ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். அதன் பிறகு நடந்த தேர்தல்களில் போட்டியிட, அக்கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, இக்கட்சி தயாராகி வருகிறது. இதில் தனது கட்சிக்கு, கடந்த தேர்தல்களில் வழங்கப்பட்ட டார்ச்லைட் சின்னத்தையே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, தலைமை தேர்தல் ஆணையத்தில் இக்கட்சி மனு கொடுத்துள்ளது.