சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ரத்து செய்தது ஒன்றிய அரசு!
புதுடெல்லி (09 டிச 2022): நாட்டின் சிறுபான்மை ஆராய்ச்சி மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை ரத்து செய்யப் பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் டி.என்.பிரதாபன் எம்.பி.யின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இதனை ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். “சிறுபான்மை மாணவர்கள் பல்வேறு சலுகைகளை பெறுவதால் இது நிறுத்தப்படுவதாக” ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். 2022-23 கல்வியாண்டிலிருந்து சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை தொடராது என்று முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர்…