சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ரத்து செய்தது ஒன்றிய அரசு!

Share this News:

புதுடெல்லி (09 டிச 2022): நாட்டின் சிறுபான்மை ஆராய்ச்சி மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை ரத்து செய்யப் பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் டி.என்.பிரதாபன் எம்.பி.யின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இதனை ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.

“சிறுபான்மை மாணவர்கள் பல்வேறு சலுகைகளை பெறுவதால் இது நிறுத்தப்படுவதாக” ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.

2022-23 கல்வியாண்டிலிருந்து சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை தொடராது என்று முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

“மத்திய அரசின் இந்த முடிவு, சிறுபான்மை மாணவர்களை கவலையடையச் செய்துள்ளது” என்று TN பிரதாபன் கூறியுள்ளார்.

இது பற்றி, எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்படும் எனவும் எம்பி பிரதாபன் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply