கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு!
பாட்னா (17 டிச 2022): பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சரண் மாவட்டத்தின் மர்ஹௌரா துணைப்பிரிவின் மஸ்ராக் தொகுதியில் உள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போலி மதுபானத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மது அருந்தி தீவிர நோய்வாய்ப்பட்டு கண்பார்வையை இழந்தவர்கள் குறித்தும் செய்திகள் வருகின்றன. 22 பேர் பல்வேறு…