அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது – கே.எஸ்.அழகிரி அறிக்கை
சென்னை (23 பிப் 2022): தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்று அண்ணாமலை கூறுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றம், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் எத்தகைய பெருவெற்றியைத் தமிழக மக்கள் வழங்கினார்களோ, அதைவிடக் கூடுதலாக…