
இளைஞர் உயிரோடு எரிப்பு – பாஜக நிர்வாகி கைது!
புதுச்சேரி (27 ஜூலை 2021): புதுச்சேரியில் இளைஞர் ஒருவரை உயிரோடு எரித்த புகாரில் பாஜக நிர்வாகி மற்றும் அவருடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ மௌரியா. மாநில பாஜக வணிக பிரிவு அமைப்பாளராக உள்ள இவர், மேட்டுப்பாளையம் சந்திப்பில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது பெட்ரோல் பங்க்கிற்கு நள்ளிரவு திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் வந்துள்ளார். அப்போது ராஜ மௌரியா, சதீஷ்குமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது….