கொல்கத்தா (20 பிப் 2021): கொக்கெய்ன் வைத்திருந்த பாஜக இளைஞர் அணி தலைவர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து 100 கிராம் கொக்கெய்ன் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களுடன் அவரது நண்பர் பிரபீர் குமார் தேயும் கைது செய்யப்பட்டார்.
‘பமீலா சில மாதங்களுக்கு முன்பு, போதை பொருள் மாஃபியா கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்தி . சிலரை போதைக்கு ஆளாக்கியுள்ளனர். இதற்கு பிரபிர் பாமீலாவிற்கு உதவியுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்ட தேடலின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர் ‘என்று போலீசார் தெரிவித்தனர்.
2019 ல் பாஜகவில் சேருவதற்கு முன்பு பமீலா கோஸ்வாமி பெங்காலி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். அவர்களுக்கு மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கட்சியில் உறுப்பினர் வழங்கினார். பின்பு அவர் பாஜகவின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கபப்ட்டர்.
பமீலா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று பாஜக மூத்த தலைவர் லாக்கெட் சாட்டர்ஜி கூறினார். போதைப்பொருள் வழக்குகளில் போலீசார் தங்கள் தலைவர்களை சிக்க வைக்கின்றனர். பாஜகவை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதுதான் யோசனை. இது அவர்களுக்கு எதிரான சதி என்று அவர்கள் தெரிவித்தனர்.