புனித மக்காவில் உம்ரா யாத்திரைக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அனுமதி!

மக்கா (02 அக் 2020): வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மக்காவிற்கு உம்ரா யாத்திரீகர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற மக்கா தலத்திற்கு யாத்ரீகர்கள் வரத் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஏழு மாதங்களாக இந்த தடை அமலில் இருந்து வரும் நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் மீண்டும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவிருக்கிறது. மூன்று கட்டங்களாக யாத்ரீகர்களுக்கு தடை விலக்கப்படவிருக்கிறது. முதல் கட்டமாக சவுதி அரேபிய குடிமக்கள்…

மேலும்...

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கொரோனா பாதிப்பால் காலமானார்!

சென்னை (30 செப் 2020):இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் (94) கொரோனா பாதிப்பால் காலமானார். ராமகோபாலனுக்கு ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். இதையடுத்து, கடந்த 27-ம் தேதி மீண்டும் ராம கோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி வெளியான பரிசோதனை…

மேலும்...

அச்சுறுத்தும் கொரோனா – கேரளாவில் மருத்துவ அவசர நிலைக்கு கோரிக்கை

திருவனந்தபுரம் (29 செப் 2020): கேரளாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால், மருத்துவ அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தின்தான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஆரம்ப கட்டத்திலிருந்தே கொரனோ தடுப்பு நடவடிக்‍கையை அம்மாநிலம் சிறப்பாக கையாண்டு, பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறைவாகவே வைத்திருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக, கேரளாவில் அதிதீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மூன்று இலக்கங்களில் இருந்த பாதிப்பு,…

மேலும்...

விஜயகாந்த் மனைவி பிரேமலதா மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (28 செப் 2020): விஜயகாந் மனைவி பிரேமலதா கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளார் விஜயகாந்துக்கு சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், பூரண உடல்நலத்துடன் உள்ள விஜயகாந்த், இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்ப உள்ளார். அடுத்த வாரத்தில் இருந்து…

மேலும்...

திமுக முக்கிய புள்ளிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று!

சென்னை (28 செப் 2020): திமுக எம்.எல்.ஏ மா. சுப்பிரமணியனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று…

மேலும்...

டெல்லி துணை முதல்வர் உடல் நிலை கவலைக்கிடம்!

புதுடெல்லி (25 செப் 2020): கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. . மணிஷ் சிசோடியாவுக்கு கொரோனா உடன் டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததை அடுத்து, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மணிஷ் சிசோடியா மாற்றப்பட்டுள்ளார்.

மேலும்...

ஒன்றரை மாத மருத்துவ சிகிச்சை வீண் – எஸ்பி.பால சுப்ரமணியன் மறைந்தார்!

சென்னை (25 செப் 2020): ஒன்றரை மாத மருத்துவ சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியன் கொரோனாவால் மறைந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

மேலும்...

கொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர் மரணம்!

புதுடெல்லி (24 செப் 2020): கொரோனா பாதிப்பால் மத்திய ரெயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி (வயது 65) உயிரிழந்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் அங்காடி, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். சுரேஷ் அங்காடி கர்நாடகாவைச் சேர்ந்தவர். கர்நாடகாவின் பெலகாவி தொகுதியில் இருந்து 4 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். டெல்லியில் இருந்து சுரேஷ் அங்காடியின்…

மேலும்...

தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு கொரோனா தொற்று!

சென்னை (24 செப் 2020): தேமுதிக தலைவர் விஜய்காந்த் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜயகாந்த் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்றபோது, அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பது தென்பட்டது. அது உடனடியாக சரிசெய்யப்பட்டது. தற்போது விஜயகாந்த் நலமுடன் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்காந்த் விரைவில் குணமடைய வேண்டும் என…

மேலும்...

கொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்!

வாணியம்பாடி (20 செப் 2020): கொரோனா பாதித்தும் கல்லூரி இறுதியாண்டு தேர்வை எழுதியுள்ளார் மாணவர் அனீசுர் ரஹ்மான்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷிராபாத் பகுதியை சேர்ந்த அனீசூர் ரஹமான் என்ற மாணவர், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் இளங்கலை வணிகவியல் என்கிற பி.காம் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் கொரோனா தொற்று பாதிக்கபட்டு, கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளப்படி பல்கலைகழகம் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவ – மாணவிகளுக்கான தேர்வுகளை…

மேலும்...