இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கொரோனா பாதிப்பால் காலமானார்!

Share this News:

சென்னை (30 செப் 2020):இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் (94) கொரோனா பாதிப்பால் காலமானார்.

ராமகோபாலனுக்கு ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.

இதையடுத்து, கடந்த 27-ம் தேதி மீண்டும் ராம கோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி வெளியான பரிசோதனை முடிவுவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராம கோபாலன் சென்னையில் காலமானார்.


Share this News:

Leave a Reply