கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பாஜக, காங்கிரஸ் படுதோல்வி!

கொல்கத்தா (22 டிச 2021): மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 144 வார்டுகளில் 134 இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 10 வார்டுகளில் பாரதிய ஜனதா 3, காங்கிரஸ் 2, இடதுசாரிகள் 2 மற்றும் சுயேச்சைகள் 3 பேர் வெற்றிமுகத்தில் இருந்தனர். இப்படியாக தனது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒற்றை இலக்கத்தில் நிற்கவைத்து, மூன்றிலக்க எண்ணில் முன்னணி வகித்து வெற்றி பெற்றுள்ளார்…

மேலும்...

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனம் மீது கல் வீசி தாக்குதல்!

கொல்கத்தா (10 டிச 2020): மேற்கு வங்கத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஆவரது வாகனம் கற்களால் வீசி தாக்கப்பட்டுள்ளது. . மேலும் அவரது மேற்கு வங்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியும் காட்டப்பட்டுள்ளது. மேலும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியின் வாகனத்தையும் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கினர். விஜய வர்கீஸ் தவிர, பாஜக மேற்கு வங்க தலைவர் திலீப் கோஷின் வாகனமும் தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணாமுல்…

மேலும்...

கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணி என்ன?

கொல்கத்தா (04 செப் 2020): பாஜகவின் மேற்கு வங்க துணை செயலாளரான அர்ஜூன் சிங் செப்டம்பர் 1 அன்று ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில் அவர் ; தீதியின் (மம்தா பானர்ஜி) அரசியலின் ஜிஹாதி இயல்பு, இப்போது இந்து மதத்தையும் அதன் கலாச்சாரத்தையும் அழிப்பதில் நரகமாக உள்ளது. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் ஒரு மதக் குழு ஒரு கோவிலைத் தாக்கி அழித்து மா காலியின் சிலையை எவ்வாறு எரித்தது என்பதைப் பாருங்கள். என்று எரிந்த நிலையிலுள்ள…

மேலும்...

அதிர்ச்சி – கொரோனா வார்டுகளில் பணிபுரியும் 300 நர்ஸ்கள் (செவிலியர்) ராஜினாமா!

கொல்கத்தா (21 மே 2020): கொல்கத்தாவில் இனப்பாகுபாடு காட்டுவதாகக் கூறி 300 செவியிலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புக்கு 2,961 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 1000 -த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர். இதுவரை 250 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாட்டில் அதிக பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடுத்து 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில்…

மேலும்...

மசூதியை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்காக உதவ முன் வந்த மசூதி நிர்வாகம்!

கொல்கத்தா (10 மே 2020): மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு மசூதியை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்காக பயன்படுத்திக் கொள்ள மசூதி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகத்தில் பரவி வருகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மசூதி நிர்வாகம், கொல்கத்தா பெங்காலி பஜார் மசூதியின் மூன்றாவது தளத்தை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என…

மேலும்...

இது டெல்லி அல்ல கொல்கத்தா – மம்தா பானர்ஜி பொளேர்!

கொல்கத்தா (02 மார்ச் 2020):டெல்லியில் நடைபெற்றதைப் போல் இங்கும் ‘கோலி மாரோ’ என்று கூறிவிட்டு ஊர் சுற்ற முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அமித் ஷா பேரணியில் கோலி மாரோ என்று கோஷமிட்ட மூவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். அதையடுத்து மம்தா பானர்ஜி இவ்வாறு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவிலுள்ள நேதாஜி உள்ளரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா, “பாஜக பேரணியில் டெல்லியைப் போல் ‘கோலி மாரோ’ என்று…

மேலும்...

கோபேக் அமித் ஷா – கொல்கத்தாவை கதறவிட்ட எதிர் கட்சியினர்!

கொல்கத்தா (01 மார்ச் 2020): கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கொல்கத்தாவில் சிஏஏ ஆதரவு பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கொகட்த்தா சென்றார். அப்போது கொல்கத்தா விமான நிலையம் அருகே Go Back Amit Shah என்ற பதாகைகளை ஏந்தியபடி இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அமித்ஷாவின் வருகைக்கு எதிராக வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டும் முழக்கங்களை…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கிறிஸ்தவர்கள் போராட்டம்!

கொல்கத்தா (20 ஜன 2020): மேற்கு வங்கத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. முஸ்லிம் கள் தவிர்த்து அனைத்து மதத்தினரும் குடியுரிமை பெறும் வகையில் உள்ள இந்த சட்டத்திற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் 8000 கிறிஸ்தவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

டெல்லி ஷஹீன் பாக்கை தொடர்ந்து உபி பீகாரிலும் தொடங்கிய தொடர் போராட்டம்!

புதுடெல்லி (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை தொடர்ந்து அதே வழியில் உத்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பொது மக்கள் அமைதி வழி தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில்…

மேலும்...

தமிழகம் செய்ததை பின்பற்றிய மேற்கு வங்கத்தினர்!

சென்னை (11 ஜன 2020): கோபேக் மோடி தமிழகத்தில்தான் பிரபலம். ஆனால் இபோது மோடி செல்லும் பல மாநிலங்களிலும் பிரபலம். பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு இன்று மாலை வருகை தந்தார். அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம்…

மேலும்...