கோபேக் அமித் ஷா – கொல்கத்தாவை கதறவிட்ட எதிர் கட்சியினர்!

Share this News:

கொல்கத்தா (01 மார்ச் 2020): கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கொல்கத்தாவில் சிஏஏ ஆதரவு பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கொகட்த்தா சென்றார்.

அப்போது கொல்கத்தா விமான நிலையம் அருகே Go Back Amit Shah என்ற பதாகைகளை ஏந்தியபடி இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அமித்ஷாவின் வருகைக்கு எதிராக வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் கொல்கத்தாவில் பதற்றம் ஏற்பட்டது.


Share this News:

Leave a Reply