கொரோனா நோயாளிகளை மருந்தே இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம் : அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை (27 ஜூன் 2020): 40 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு மருந்தோ, ஊசியோ இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம் என்று சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மருத்துவக் கல்லூரி டீன் குந்தவி தேவி ஆகியோர் கலந்து கொண்ட நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் கூறும்போது,…

மேலும்...

சென்னை கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக தகவல்!

சென்னை (27 ஜூன் 2020): சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் அரசு சார்பில் வெளியிட்டுயிருக்கிறார்கள் : விபரங்கள் பின்வருமாறு, ராயபுரம் – 7211 தண்டையார்பேட்டை – 5989, தேனாம்பேட்டை – 5655 பேருக்கு தொற்று இருக்கிறது என்ற அறிவிப்போடு, அண்ணா நகர் – 5397, கோடம்பாக்கம் – 5316, திரு.வி.க. நகர் – 4132 பேருக்கும் மேலும் அடையாறு – 3057, மாதவரம் – 1524, ஆலந்தூர் – 1229, அம்பத்தூர் – 1982…

மேலும்...

தொலைக்காட்சி ஊழியர்கள் அதிர்ச்சி – கொரோனா பாதிப்பால் ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் மரணம்!

சென்னை (27 ஜூன் 20220): கொரொனா பாதிப்பால் ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார். 40 வயதான அவர், கொரோனா தொற்றால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

மேலும்...

சாத்தான்குளம் சம்பவம் – இறந்தவர்களுக்கு சிகிச்சை மறுப்பு: வெளி வந்துள்ள பதற வைக்கும் தகவல்!

சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை எதிரில் செல்போன் கடை நடத்திவந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் கடையைத் திறந்து வைத்ததுள்ளதாக் கூறி, போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி மரணம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்நிலையத்தில் போலீஸார் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அரசு மருத்துவர் முறைப்படி பரிசோதனை செய்யாமல் ரிமாண்டுக்கு அனுப்ப எப்படிச் சம்மதித்தார் என்ற புகாரும் எழுப்பப்பட்டது. அத்துடன், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட் மற்றும்…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று!

புதுடெல்லி (27 ஜூன் 2020): இந்தியாவில் ஒரே நாளில், 18 ஆயிரத்து, 552 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் ஒரே நாளில், நாடு முழுதும், 18 ஆயிரத்து, 552 பேரிடம், கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 08 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து 387 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

மேலும்...

கொரோனா நன்கொடை தொகைகளை மறைக்கிறதா? தமிழக அரசு – சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்!

சென்னை (26 ஜூன் 2020): கொரோனாவிற்காக கிடைக்கும் நன்கொடை விவரங்களை விரைவில் தமிழக அரசு இணையத்தில் வெளியிடும் என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தகவல்களை இணையத்தளத்தில் வெளியிட வேண்டும் என்றும், எவ்வளவு நன்கொடை வந்துள்ளது என்று வெளிப்படையாக கூறவேண்டும் எனவும் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் இன்று தமிழக அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், முதலமைச்சர் நிவாரண…

மேலும்...

தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு இனி பால் கிடையாது – பால் முகவர்கள் அதிரடி அறிவிப்பு!

சென்னை (26 ஜூன் 2020): “தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப் போவதில்லை”. என்று பால் முகவர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற…

மேலும்...

ஜூன் 30 க்கு பிறகும் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு!

சென்னை (26 ஜூன் 2020): தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜூன் 30 க்குப் பிறகும் ஊரடங்கு தொடரலாம் என்ற கருத்து நிலவுகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3645 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது. இந்த…

மேலும்...

சென்னையில் காட்டுத்தீயாய் பரவும் கொரோனா – ஒரே நாளில் 24 பேர் பலி!

சென்னை (26 ஜூன் 2020): சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில் இன்று மட்டும் 24 பேர் பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர, டெல்லியை அடுத்து தமிழகத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மிகவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தனர். கே.எம்.சி. மருத்துவமனையில் 4 பேரும், ஆயிரம்…

மேலும்...

தடுமாறும் தமிழகம் – ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை (25 ஜூன் 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவி ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,56,183-லிருந்து 4,73,105-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,476-லிருந்து 14,894-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685-லிருந்து 2,71,697-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 418 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 16,922 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது…

மேலும்...