சென்னை விமான நிலைய சிஐஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 ஜூன் 2020): சென்னை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை நிர்வாக அலுவலகத்தில் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் நிர்வாக அலுவலகம் சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ளது. இங்கு, பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 7 பேருக்கு கொரோனா வைரஸ்…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

சென்னை (21 ஜூன் 2020): பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களீன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது . அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக்…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (20 ஜூன் 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவிலும் அது அதி வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு…

மேலும்...

ஜூன் 21 ஆம் தேதி முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் சவூதி அரேபியா!

ரியாத் (20 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சவூதி அரேபியா இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இதுகுறித்து சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜுன் 21 2020 முதல் அனைத்து பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகள் இயங்கும். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தல் அவசியமாகும். வெளிநாட்டு விமான…

மேலும்...

கேள்விகள் 10: வெளிப்படைத் தன்மை இல்லாத பிரதமர் நிவாரண நிதி! (வீடியோ)

கொரோனா நிவாரண நிதியாக பி.எம்.கேர் என்ற பெயரில் வசூலான தொகை குறித்தோ அதன் கணக்கு வழக்குகள் குறித்து பொதுவில் வராதது குறித்து எழுப்பும் 10 கேள்விகள்.

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா – 49 பேர் மரணம்!

சென்னை (18 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக இன்று 2 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் மட்டும்…

மேலும்...

மிகவும் கஷ்டப்பட்டேன் – நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்: ரசிகர்களுக்கு ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை!

இஸ்லாமாபாத் (18 ஜூன் 2020): “கொரோனா வைரஸின் தாக்கத்தால் மூன்று நாட்கள் மிகவும் கடினமாக உணர்ந்தேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என்று பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள ஷாஹித் அஃப்ரிடி மீது பரவிய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் உணவின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ என் குழுவுடன் உதவி செய்து வந்தபோதே என்னையும் கொரோனா தாக்கும் என்று…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பரிதாபம் – இறந்த கொரோனா நோயாளியின் இறுதிச் சடங்கில் அஜாக்கிரதை!

காசியாபாத் (18 ஜூன் 2020): உத்திர பிரதேசம் காசியாபாத்தில் கொரோனா வைரஸால் இறந்த ஒரு நபரின் உடல், தகனத்தின் போது மின்சார தகனம் செயலிழந்த்தால் உடல் பாதி எரிந்து அநாதையாக கிடந்துள்ளது. 58 வயதான தொழிலதிபர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் காசியாபாத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்ய திங்கள் கிழமை காலை 11 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் தகனம் செய்யப்படும்போது நடுப்பகுதியில் தகனம் செய்யும் எந்திரம் வேலை செய்யவில்லை….

மேலும்...

முதலில் நெகட்டிவ் தற்போது பாஸிட்டிவ் – அமைச்சரை தாக்கிய கொரோனா வைரஸ்!

புதுடெல்லி (17 ஜூன் 2020): டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உச்சத்தில் இருந்து வருகிறது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் விட அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கி விட்டது. அது மட்டுமின்றி இந்தியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர் வரை பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா…

மேலும்...

முதல்வர் எடப்பாடியின் தனிச்செயலர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் மரணம் – அதிர்ர்சியில் முதல்வர்!

சென்னை (17 ஜூன் 2020): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தனிச்செயலர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வர் அலுவலகத்தில் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தவர் தாமோதரன். அந்த வகையில் அலுவலக ரீதியாக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும்போது அடிக்கடி நேரடியாக சந்திப்பவர்களில் இவரும் ஒருவர். முதல்வரை சந்திக்க வருபவர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பணிகளை தாமோதரன் கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாமோதரனுக்கு…

மேலும்...