ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். 2023 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதை ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். சென்னை அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதை ரீ ட்விட் செய்து தன்னுடைய கருத்தை பதிவிட்டிருந்த அமைச்சர்…

மேலும்...

2023 ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் சவூதி அரேபியா!

ரியாத் (15 பிப் 2023): சவூதி அரேபியாவில் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இந்த ஆண்டு டிசம்பர் 12 முதல் 22 வரை நடைபெறும் என்று சவுதி அரேபிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் கடைசியாக மொராக்கோவிலும், 2020 மற்றும் 2021 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இது தவிர பிரேசில், ஜப்பான் மற்றும் கத்தார் ஆகியவை முந்தைய ஆண்டுகளில் இந்த போட்டியை நடத்தியுள்ளன. சவூதி தேசிய அணிகள் ஐந்து முறை இந்த போட்டிகளில்…

மேலும்...

ரகசிய கேமராவில் சிக்கிய பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் சேத்தன்குமார் சர்மா!

புதுடெல்லி (15 பிப் 2023): பிசிசிஐயின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன்குமார் சர்மா தனியார் தேசிய ஊடகம் நடத்திய ரகசிய கேமரா நடவடிக்கையில் சிக்கியுள்ளார். பிசிசிஐ அணிக்கு சேத்தன் சர்மா தேர்வு செய்யும் அணி குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து அவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் ரோஜர் பின்னி தலைமையில் புதிய நிர்வாகம் வந்தவுடன் எந்தப் பதவியில் இருந்து சேத்தன் சர்மா நீக்கப்பட்டாரோ தற்போது அதே பதவிக்கு வந்துள்ளார் இந்நிலையில்…

மேலும்...

உலக கால்பந்து நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார்!

ரியாத் (03 ஜன 2023): – சவுதி கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது. உலக கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார். கிறிஸ்டியானோ அண்ணாஸ்ர் கிளப்பில் சேர்ந்துள்ள நிலையில் அவர் ரியாத் வந்துள்ளார். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார். ரியாத்தில் உள்ள அன்னாஸ்ர் கிளப்புடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரொனால்டோ, செவ்வாய்கிழமை ரசிகர்கள் முன்னிலையில் மஞ்சள் ஜெர்சியில் தோன்றுவார். வரும் வியாழன் அன்று ரொனால்டோவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என எதிர்…

மேலும்...

மாரத்தான் போட்டியில் அசத்திய முதியவர் ஷஹாபுத்தீன்!

அதிராம்பட்டினர்ம் (31 டிச 2022): தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளில் பங்கேற்றனர். இந்நிலையில் இதில் குறிப்பாக 65 வயது முதியவர் வழக்கறிஞர் ஷிஹாபுத்தீன் கலந்துகொண்டு முழுமையாக ஓடி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இறுதிவரை ஓடியும் அவர் முகத்தில் களைப்பைக் காட்டிக் கொள்ளவே இல்லை. இவர் மறைந்த முன்னாள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ…

மேலும்...

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் காயம்!

புதுடெல்லி (30 டிச 2022): – இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கார் விபத்தில் காயமடைந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பிய ரிஷப், புதுதடெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரூர்க்கியில் உள்ள ஹம்மத்பூர் ஜல் அருகே நர்சன் எல்லையில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. மெர்சிடிஸ் காரை ரிஷப் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. காரின் வெளிப்பகுதி கடுமையாக எரிந்துள்ளது. எனினும்…

மேலும்...

உலக கால்பந்தாட்டத்தின் ஆல் டைம் மன்னன் பீலே காலமானார்!

பிரேசில் (30 டிச 2022): உலக கால்பந்தாட்டத்தின் ஆல் டைம் மன்னன் சாவ் பாலோ- பீலே காலமானார். அவருக்கு வயது 82. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பிரேசில் தலைநகர் சாவோ பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்தார். அப்போது .பீலேவின் மகன் எடின்ஹோ, மகள்கள் ஃபிளாவியா அரான்ட்ஸ் மற்றும் கெல்லி நாசிமென்டோ ஆகியோர் மருத்துவமனையில் இருந்தனர். முன்னதாக அவருக்கு மோசமான உடல்நிலையைத் தொடர்ந்து எதுவும் நடக்கலாம் என்று மருத்துவர்கள்…

மேலும்...

அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்தவர் – காங்கிரஸ் எம்பி பகீர் தகவல்!

புதுடெல்லி (19 டிச 2022): அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அஸ்ஸாமில் பிறந்தவர் என்று காங்கிரஸ் எம்பி அப்துல் காலிக் கூறியுள்ளார். இதுகுறித்து அப்துல் காலிக் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் தகவலுக்கு மற்றவர்கள் எம்பியை கேலி செய்ய முன்வந்ததால் அவர் சில நிமிடங்களில் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். அசாமில் உள்ள பார்பெட்டா தொகுதியில் இருந்து மக்களவைக்கு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் காலிக். இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மெஸ்ஸி…

மேலும்...

மெஸ்ஸியின் கனவு வென்றது – உலகக் கோப்பையுடன் அர்ஜெண்டினா!

தோஹா (19 டிச 2022): 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் பலப்பரீட்சையில் இறங்கின. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் தன்னகத்தே ஈர்த்த இந்த இறுதியுத்தம் முதல் வினாடியில் இருந்தே விறுவிறுப்பாக நகர்ந்தது….

மேலும்...

உலகக்கோப்பை கால்பந்து – இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா!

தோஹா (14 டிச 2022): கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று, கால்இறுதி முடிவில் இப்போது அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதியது. இரு அணிகளும் சரிசம…

மேலும்...