சட்டப்பேரவையில் அதிமுக விசிக வெளிநடப்பு!

சென்னை (05 ஜன 2022): தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக விசிக வெளிநடப்பு செய்தது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக்கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், சட்டப்பேரவையில் முதன்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டது. தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டின் முதல் கூட்டம் தொடங்கியது. தன் உரையை தொடங்கிய ஆளுநர், கொரோனா இரண்டாவது அலையை சமாளித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினார். மேலும், ”மெகா முகாம்கள்…

மேலும்...

நள்ளிரவில் கூடும் தமிழக சட்டப்பேரவை!

சென்னை (09 ஆக 2021): சுதந்திர தினத்தன்று நள்ளிரவில் சட்டப்பேரவையில் சுதந்திர தின கொண்டாட்டம் நடத்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் தமிழ்நாடு அரசின் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார் மு.க. ஸ்டாலின். அவரது உரையில் பல முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், சுதந்திரத் தினத்தின் 75வது ஆண்டு என்பதால், ஆகஸ்ட் 15ஆம்…

மேலும்...

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

சென்னை (24 ஜூன் 2021): தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் பல ஊழல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதற்குப் பிறகு கடந்த இரு நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டு பேசினர். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர். கூட்டத்தொடரின்…

மேலும்...

திமுகவுக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்பு!எடப்பாடி அதிர்ச்சி..!!

சென்னை (25 ஆக 2020): திமுக மீது உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்வதாக சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து, சட்டப்பேரவைக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக்கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த…

மேலும்...

செய்தியாளர்களிடம் பேசியதை ஏன் தீர்மானமாக்கக் கூடாது? – ஸ்டாலின் சரமாரி கேள்வி!

சென்னை (14 மார்ச் 2020): “என்பிஆர் இப்போதைக்கு செயல்படுத்தப்போவதில்லை என்று அமைச்சர் உதயகுமார் கூறியதை ஏன் சட்டசபையில் தீர்மானமாக்கக் கூடாது?” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டபேரவை நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று கூறியது சட்டசபையில் விவாதமானது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பிஉதயகுமார், “செய்தியாளர்களிடம் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை. என்.பி.ஆரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுபான்மையினரிடையே பதட்டமான சூழல் ஏற்படுத்தும் விதமாக…

மேலும்...

விழி பிதுங்கி நிற்கும் மோடி அமித் ஷா – தெலுங்கானா மாநிலமும் கை விரிப்பு!

புதுடெல்லி (20 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெலுங்கானா மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதால் மேலும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது மத்திய அரசு. குடியுரிமை சட்டம் அமல்படுத்தப் பட்டது முதலே மத்திய அரசு தேன் கூட்டுக்குள் கைவிட்ட நிலையில் மாட்டிக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிதவிக்கும் இந்தியாவிற்கு இச்சட்டம் அவசியம்தானா என பாஜகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களில் சிலரும் மத்திய அரசை கேள்வி கேட்க தொடங்கினர். இந்நிலையில் இச்சட்டத்தை…

மேலும்...

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் – மசோதா தாக்கல்!

சென்னை (20 பிப் 2020): காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் அதன் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். பிற்பகல் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இதுபற்றி சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாதுகாக்கப்பட்ட சிறப்பு…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெலுங்கானா அரசு தீர்மானம் – முதல்வர் முடிவு!

ஐதராபாத் (17 பிப் 2020): மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. மேலும் பாஜக கூட்டணியில் உள்ள மாநிலங்கள் கூட எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில்…

மேலும்...

கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்!

ஜெய்ப்பூர் (25 ஜன 2020): கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது. மேலும், “அரசு முடிவை கேட்காமல் எந்தவொரு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது”…

மேலும்...