கொரோனா வைரஸ் – சர்வதேச அவசரநிலை அறிவிப்பு!
பீஜிங் (01 பிப் 2020): சீனாவில் உருவாகி 22 நாடுகளுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதைத் தொடா்ந்து, ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு சா்வதேச சுகாதார அவசர நிலை அறிவித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை அவசரமாகக் கூடி இதுதொடா்பாக விவாதித்தது. அதனைத் தொடா்ந்து, புதிய வகை கரோனா வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார…