மும்பையிலும் டெல்லி கலவரம் போல் நடத்த பாஜக விருப்பம் – சிவசேனா குற்றச்சாட்டு!
மும்பை (11 மார்ச் 2020): மும்பையிலும் டெல்லியைப் போல் கலவரம் நடத்த பாஜக விரும்பியதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் மேற்கொண்டதையும், ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடி நன்கொடை வழங்கியதையும் பாஜக விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா பதிலளித்துள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டிருப்பதாவது: உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதற்கு பா.ஜனதாவினர் மகிழ்ச்சி தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதாவினரால் உத்தவ் தாக்கரே அயோத்தி…