மும்பையிலும் டெல்லி கலவரம் போல் நடத்த பாஜக விருப்பம் – சிவசேனா குற்றச்சாட்டு!

Share this News:

மும்பை (11 மார்ச் 2020): மும்பையிலும் டெல்லியைப் போல் கலவரம் நடத்த பாஜக விரும்பியதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் மேற்கொண்டதையும், ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடி நன்கொடை வழங்கியதையும் பாஜக விமர்சித்து வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா பதிலளித்துள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டிருப்பதாவது:

உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதற்கு பா.ஜனதாவினர் மகிழ்ச்சி தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதாவினரால் உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதை ஏற்று கொள்ள முடியவில்லை.

மராட்டிய பா.ஜனதா தலைவர்கள் உத்தவ் தாக்கரேயை விமர்சிப்பதில் இருந்து அவர்களின் தீய நோக்கங்கள் அம்பலப்படுகின்றன. காங்கிரசுடன் கைகோர்த்த போதும் சிவசேனா இந்துத்வா கொள்கையில் இருந்து தூரமாக செல்லவில்லை. இதனால் தான் எதிர்க்கட்சியினர் (பா.ஜனதா) தடுமாற்றத்தில் உள்ளனர்.

கூட்டணி கட்சியினர் வேறுபட்ட கொள்கைகளை கொண்டு இருக்கலாம். ஆனால் மக்கள் சேவையில் ஈடுபட்டு, மனிதர்களை சமமாக நடத்த வேண்டும். அதை தான் ராமர் பின்பற்றினார். நாங்களும் தற்போது அதை தான் பின்பற்றுகிறோம். குடியுாிமை திருத்த சட்ட விவகாரத்தில் டெல்லியை போல மராட்டியத்திலும் வன்முறை நிகழ வேண்டும் என எதிர்க்கட்சி (பா.ஜனதா) விரும்பியது. ஆனால் உத்தவ் தாக்கரே அந்த பிரச்சினையை கவனமாக கையாண்டு சிறிய சம்பவம் கூட நடக்காமல் பார்த்து உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply