யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை மீண்டும் தொடக்கம்!
கொழும்பு (12 டிச 2022): யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவையை இலங்கை மீண்டும் தொடங்கியுள்ளது. கோவிட் பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட விமானச்சேவை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. இலங்கை விமான நிலைய அதிகார சபையின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு அலையன்ஸ் ஏர் வாரத்திற்கு நான்கு முறை செயல்படும். சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாண விமான நிலைய ஓடுபாதை மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது 75…