குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் மோடியின் மனைவியா? -உண்மை என்ன?
புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் பங்கேற்றதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. நாடெங்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுத்து வரும் நிலையில் சில பரபரப்பான செய்திகளுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படத்தில் பெண்கள் அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற…