புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் பங்கேற்றதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
நாடெங்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுத்து வரும் நிலையில் சில பரபரப்பான செய்திகளுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படத்தில் பெண்கள் அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது.
ஆனால் இந்த புகைப்படம் பிப்ரவரி 13, 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. deccan chronicle ல் இடம்பெற்றுள்ள இந்த படமும் அதன் செளியானன செய்தி தொகுப்பில், “பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஆதரவற்றோருக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்” எனும் தலைப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
செய்திகளின் உண்மை தன்மை குறித்து ஆராயமல் பதிவதல் பல அசவுகரியங்களை சந்திக்க நேரிடும் என்பதை இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன.