என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் – ஸ்டாலின் மீது ஓபிஎஸ் பாய்ச்சல்!
சென்னை (17 பிப் 2022): “ஜல்லிக்கட்டு விவகாரத்தில் என் மீது முதல்வர் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காணொலிக் காட்சி வாயிலாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு குறித்து பேசி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட காரணமாக இருந்த கட்சி மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த தி.மு.க….