அமெரிக்க சம்பவத்துக்கு எதிராக போராட்டத்தில் மண்டியிட்ட கனடா பிரதமர்!

டொரன்டோ (07 ஜூன் 2020): ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்டு போலீஸ் அத்துமீறலால் சமீபத்தில் அமெரிக்காவில் உயிரிழந்தார். இதையடுத்து இன வெறி போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கனடா தலைநகரான ஒட்டாவாவில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது போராட்டக்காரர்கள் அவரை மண்டியிடக் கூறினர். இதையடுத்து அவர் மண்டியிட்டு கோஷம் எழுப்பி போராட்டத்துக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.

மேலும்...

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் – தனி அறையில் பிரதமர்!

டொரன்டோ (13 மார்ச் 2020): கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அவருடைய மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடுப்புக்காப்பாக பிரதமர் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பினார். அதையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரை கொரோனா தொற்றியுள்ளது தெரிய வந்தது. எனவே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவருடைய மனைவியும் அடுத்த 14 நாள்களுக்கு தடுப்புக்காப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கனடாவில் 145…

மேலும்...

தமிழர்களுக்கு கனடா பிரதமர் பொங்கல் வாழ்த்து – வீடியோ!

கனடா (16 ஜன 2020): பொங்கல் திருநாளை முன்னிட்டு கனடா பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தைத்திருநாளான முதல் நாள் நெல் அறுவடை செய்து, தை முதல் நாளில், சூரியனை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுபது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழில் வணக்கம் தெரிவித்து தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.மேலும் கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின்…

மேலும்...