குழந்தைகள் உயிரிழப்புக்கு அரசே காரணம் – நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிருப்பிப்பேன்: டாக்டர் கஃபீல்கான்!

புதுடெல்லி (11 நவ 2021): உத்திர பிரதேசத்தில் கடந்த 2017ல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் மரணிக்க அரசே காரணம் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று டாக்டர் கஃபீல்கான் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் இயங்கும் மக்கள் விரோத அரசான யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும்…

மேலும்...
Dr.Kafeel Khan-Gorakhpur

கானுக்கு களங்கம் கற்பிக்க முயலும். உ.பி. அரசு!

தில்லி (28 ஜூலை 2020):மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 10, 2017 இரவு உ.பி. அரசு மருத்துவமனை ஒன்றில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை நெருக்கடியில் 60 பேர் கொல்லப்பட்டனர். அவ்வேளை, கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளை காப்பாற்றியதற்காக டாக்டர் கஃபீல் கான் ஒரு ஹீரோ என்று புகழப்பட்டார்.  நாடே அவரைக் கொண்டாடியது! ஆகஸ்ட் 22 அன்று, அவர் தனது விரிவுரையாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக இந்த 60 மரணங்களுக்கும் அவரே காரணம் என்று…

மேலும்...

பிரதமர் மோடிக்கு சிறையிலிருக்கும் டாக்டர் கஃபீல் கான் கடிதம்!

லக்னோ (26 மார்ச் 2020): கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு டாக்டர் கஃபீல் கான் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”கொரோனா வைரஸை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டிய நேரம் இது. எனவே நாட்டில் நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு என்னால் ஆன முயற்சியையும் மேற்கொள்ளும் விதமாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுகிறேன். மேலும் மாவட்டம் முழுவதும் குறைந்தது…

மேலும்...