கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் சைமனின் உடலை வெளியே எடுக்க சென்னை நகராட்சி மறுப்பு!
சென்னை (27 ஏப் 2020): பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக டாக்டர் சைமனின் உடலை மீண்டும் வெளியே எடுக்க சென்னை மாநகராட்சி மறுத்துவிட்டது. நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்ட சென்ற போது மக்கள் சிலர் கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும் என்ற அச்சத்தில், மருத்துவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய விடாமல், தடுத்து நிறுத்தியதோடு, அவரைக் கொண்டு…