ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் மீதான தடை ரத்து!

மும்பை (11 ஜன 2023): ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு பேபி பவுடரை தயாரிக்கவும், விற்கவும், விநியோகிக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்கிய மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அந்நிறுவனம் பேபி பவுடரை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் கவுதம் படேல் மற்றும் எஸ் ஜி டிகே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், 2018 டிசம்பரில் கைப்பற்றப்பட்ட நிறுவனத்தின் பேபி பவுடரின் மாதிரியை சோதனை செய்வதில் தாமதம் செய்ததற்காக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) மீது…

மேலும்...

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி எடுத்துச் செல்ல தடை!

கொழும்பு (11 டிச 2022): இலங்கையில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர் காலத்தில் மாடுகள் மற்றும் ஆடுகள் பலியாவதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும்...

அறிவிக்கப்படாத அவசர நிலை – எஸ்டிபிஐ அறிக்கை!

புதுடெல்லி (28 செப் 2022): பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் சார்பு அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதியாகும் என்று SDPI தெரிவித்துள்ளது. இதுகுறித்து SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைசி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், சங்கச் சுதந்திரம் அரசால் நசுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் சாசன விழுமியங்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க பாஜக தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அனைத்து…

மேலும்...

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பிற்கு ஐந்தாண்டு தடை!

புதுடெல்லி (28 செப் 2022): பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசிய அமைப்பிற்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இது சட்டவிரோத அமைப்பு என மத்திய அரசு அறிவித்துள்ளது. PFI மற்றும் தொடர்புடைய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. யுஏபிஏ பிரிவு 3ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. . கேம்பஸ் ஃப்ரண்ட், ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன்,…

மேலும்...

ஹலால் பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (22 ஏப் 2022): நாடு முழுவதும் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் ஹலால் சான்றிதழை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் வழக்கறிஞர் விபோர் ஆனந்த், நாட்டில் 85 சதவீதம்பேர் ஹலால் பொருட்களை விரும்பவில்லை எனக்கூறி மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த மனுவில் “இந்திய அரசியலமைப்பின் 14, 21 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளின்படி இதனை செயல்படுத்த வேண்டும். ….

மேலும்...

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடை – பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவிகள்!

உடுப்பி (22 ஏப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் தடை விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடுப்பி மாவட்டத்தி ஹிஜாப் அணிந்து 12 ஆம் வகுப்பு தேர்வெழுத சென்ற மாணவிகள் இருவர் தேர்வு எழுத அனுமதி மறுப்பட்டுள்ளனர். அனுமதி மறுக்கப்பட்ட இருவரும் ஹிஜாபுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் மனு அளித்தவர்கள் ஆவர். கர்நாடகா உடுப்பியில், இரண்டாம் பியூசி (12ஆம் வகுப்பு) தேர்வு எழுத வித்யோதயா பியூ கல்லூரி தேர்வு மையத்திற்கு வந்த அலியா அசாதி மற்றும் ரேஷ்மா…

மேலும்...

டெல்லி கலவரம் – கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி (20 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஹனுமன் ஜெயந்தியையொட்டி கலவரம் வெடித்ததாகக் கூறப்படும் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க என்டிஎம்சி இடிப்பு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதனை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, கபில் சிபல், பி.வி.சுரேந்திரநாத் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற பார்வைக்குக் கொண்டு சென்றனர். இதன் பேரில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முன்னதாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரியில்…

மேலும்...

திரைத்துறையினருக்கு இது ஒரு எச்சரிக்கை – ஜவாஹிருல்லா!

சென்னை (19 ஏப் 2022): மனிதநேய மக்கள் கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா, சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த, சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்ககக் கோரியிருந்தார். இந்நிலையில் தி.இந்து இதழிற்கு அளித்த பேட்டியில் இது தமிழ் திரையுலகிற்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என தெரிவித்துள்ளார்.. அவரது பேட்டி: ஏன் பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்? நான் படத்தைப் பார்க்கவில்லை,…

மேலும்...

பீஸ்ட் திரைப்படத்திற்கு கத்தாரிலும் தடை!

தோஹா (10 ஏப் 2022): விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு குவைத் தடை விதித்துள்ள நிலையில் கத்தார் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். விஜய் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல் காட்டுவதால் படத்தை தடை செய்ய குவைத் அரசு முடிவு செய்தது. இந்நிலையில் கத்தாரிலும் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் திரைப்படமும் கத்தார், குவைத், ஐக்கிய அரபு…

மேலும்...

மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்க பள்ளி ஆசிரியர்கள் தடை – தமிழகத்திலுமா இப்படி?

கிருஷ்ணகிரி (08 ஏப் 2022): மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்க ஆசிரியர்கள் தடை விதித்ததால் பெற்றோர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கொரல்தந்தம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்தநிலையில் ரமலான் நோன்பு தற்போது கடைபிடிக்கப் பட்டு வருவதால் மாணவர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இதற்கு தடை விதித்த பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி, நோன்பு இருப்பதை தவிர்க்க கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்…

மேலும்...