தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (18 ஏப் 2021): கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கு. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் சில புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பரவல் – தலைமை செயலாளர் பரபரப்பு அறிக்கை!

சென்னை (03 ஏப் 2021): கொரோனா நோய் தொற்று பரவலை கண்காணித்து தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். “இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் கொரோனாநோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த தொற்று அதிவேகமாகவும், பன்மடங்கும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், அதேவேளையில் பஞ்சாப், கர்நாடகா, சதிஷ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், டெல்லி மற்றும் தமிழ்நாட்டிலும் நாள் ஒன்றுக்கு நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை…

மேலும்...

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது மகிளா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பரபரப்பு புகார்

சென்னை (12 மார்ச் 2021): தமிழக காங்கிரஸ் கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு ஒருவருக்கு கூட டெபாசிட் கிடைக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மகிளா தலைவர் ஜான்சிராணி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “நிலக்கோட்டை தொகுதி மக்களால் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களுக்கு அயராது தொண்டாற்றி, காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக மிளிர்ந்த எனது பாட்டி ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்களை சிறு வயது முதல் பார்த்து…

மேலும்...

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னை (27 பிப் 2021): தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 287 ஆண்கள், 194 பெண்கள் என மொத்தம் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று உயருகிறது. அதிகபட்சமாக சென்னையில்…

மேலும்...
TN-Students

9, 10, 11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என உத்தரவு!

சென்னை (25 பிப் 2021): தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி, பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும்…

மேலும்...

பிரதமர் மீண்டும் தமிழகம் வருகை – சூடு பிடிக்கும் தமிழக அரசியல்!

சென்னை (25 பிப் 2021): தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான பல புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். மாலையில் கோவை வரும் அவர், கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். முன்னதாக சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கும் அரசு விழாக்களில் பங்கேற்கிறார். தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து…

மேலும்...
CORONA-India

கேரளா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து வருவோருக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

சென்னை (25 பிப் 2021): கேரளா, மராட்டியத்தில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுக்கு பின் மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாக மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது….

மேலும்...

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு!

சென்னை (30 ஜன 2021): வருகிற 1-ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக முன்கள பணியாளர்களில் மருத்துவர்கள், செவிலியர்களில் 6 லட்சம் பேருக்கு…

மேலும்...

அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!

சென்னை (22 ஜன 2021): பிற நாடுகளைப் போல பிரதமர்,முதல்வர், அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இன்று சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ”சுகாதார பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ மற்றும்…

மேலும்...

தமிழகம், கேரளா தடுப்பூசி போடுவதில் பின்தங்கல்-மத்திய அரசு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (19 ஜன 2021): தடுப்பூசி போடுவதில் கேரளா மற்றும் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. முன்னுரிமை பிரிவில் உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் கூட இதுவரை தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசியை நம்புமாறு சுகாதார ஊழியர்களை வலியுறுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாநிலங்களுடனான வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடந்த உரையாடலில் மத்திய அரசு இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது. தமிழகம் மற்றும் கேரளா தடுப்பூசி போட தயங்குகின்றன என்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்துள்ளது. தடுப்பூசி…

மேலும்...