புதுடெல்லி (19 ஜன 2021): தடுப்பூசி போடுவதில் கேரளா மற்றும் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
முன்னுரிமை பிரிவில் உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் கூட இதுவரை தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசியை நம்புமாறு சுகாதார ஊழியர்களை வலியுறுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாநிலங்களுடனான வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடந்த உரையாடலில் மத்திய அரசு இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளா தடுப்பூசி போட தயங்குகின்றன என்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போட தொடங்கிய முதல் நாளில், தமிழ்நாட்டில் 161 அமர்வுகளில் 2,945 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. கேரளாவில் 133 அமர்வுகளில் 8,062 பேருக்கும், சத்தீஸ்கரில் 97 அமர்வுகளில் 97,592 பேருக்கும், பஞ்சாபில் 59 அமர்வுகளில் 1,319 பேருக்கும், ஆந்திராவில் முதல் நாளில் 18,412 பேருக்கும், கர்நாடகாவில் 242 அமர்வுகளில் 13,594 பேருக்கும், தெலுங்கானாவில் 140 அமர்வுகளில் 6,653 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.