மதங்களை கடந்து கொரோனாவால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம் செய்த தமுமுக!
சென்னை (28 ஜூன் 2021); மதங்களைக் கடந்து கொரோனாவால் உயிரிழந்த நூற்றுக் கணக்கான உடல்களை அடக்கம் செய்து பலரையும் நெகிழ வைத்துள்ளனர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) தொண்டர்கள். கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என விஸ்வரூபம் எடுத்து உலகையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில், இந்தியா மிகப் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மீதுள்ள அச்சத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இறந்தோரின்…