எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்!

Share this News:

சென்னை (30 மே 2020): எழுத்தாளரும் தமிழறிஞருமான தமிழ் மாமணி அதிரை அஹமது அவர்கள் இன்று காலை காலமானார்கள். அவர்கள் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹ்மது அவர்கள் இன்று மரணமடைந்தார்கள் என்ற செய்தி கடும் துயரத்தை அளித்ததது.

தலைசிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்த அஹ்மது அவர்கள் வேலூர் பாக்கியத்துஸ் சாலிஹாத் அரபிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்து அங்கு ஆலிம்கள் சிறந்த தமிழறிஞர்களாகவும் உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தார்.

மார்க்க பணிகளில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த அஹ்மது அவர்கள் சவூதி அரேபியாவில் பணியாற்றிய காலத்தில் அங்குள்ள தமிழக முஸ்லிம்களுக்கு மார்க்க ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார்.

சிறந்த எழுத்தாளராக விளங்கிய அஹ்மது அவர்கள் பல்வேறு தலைப்புகளில் 38 நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஹ்மது காக்கா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அந்த பெருந்தகையின் மரணம் தமிழுலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அல்லாஹ் அவர்களுக்கு மறுமையின் நற்பேறுகளை வழங்குவதற்கும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அழகிய பொறுமையை அளிப்பதற்கும் பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share this News: