அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை (25 டிச 2022): தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை முருகனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 1:30க்கு துரை முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.