என்னை கூப்பிடாதீங்க – நீதிமன்றம் செல்ல அஞ்சும் ரஜினி!

சென்னை (22 பிப் 2020): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டு நடிகர் ரஜினி மனு அளித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்தும், போராட்டம் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, போராட்டக்காரர்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்ததாக கருத்து தெரிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்…

மேலும்...

தூத்துகுடி துப்பாக்கிச் சூடு – சென்னை வண்ணாரப் பேட்டை தாக்குதல் – கனிமொழி ஆவேசம்!

சென்னை (15 பிப் 2020): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணையில் உள்ள போலீஸ் அதிகாரிதான் சென்னை வண்ணாரப் பேட்டை தாக்குதலின் பின்னணியில் உள்ள கபில்குமார் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று சி.ஏ.ஏ. / என்.ஆர்.சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை உரிய முறையில், சரியாக கையாண்டிருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ், நிலைமையை…

மேலும்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ரஜினியிடம் விசாரணை – பரபரப்பை கிளப்பும் விசாரணை அதிகாரி!

சென்னை (25 ஜன 2020): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினியிடம் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விசாரணையை அடுத்து வழக்கறிஞர் வடிவேல் முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “18 ஆம் கட்ட விசாரணை கடந்த…

மேலும்...