மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசுப் பள்ளியின் அடடே அறிவிப்பு!
கடலூர் (22 ஆக 2020): கடலூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு ரூ 2000 அன்பளிப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயிலில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து கொண்டே வந்துள்ளது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை…