ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை!
புதுடெல்லி (07 ஜூன் 2020): நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5-ம் கட்டமாக வரும் 30-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன்…