பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய மறுப்பு!

புதுடெல்லி (26 ஏப் 2022): பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரசில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவர் காங்கிரசில் இணைய மறுத்துவிட்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பிரசாந்த் கிஷோருடனான நீண்ட ஆலோசனைக்கு பிறகு, அதிகாரம்மிக்க குழு ஒன்றை அமைத்த காங்கிரஸ் தலைவர் சோனியா, அக்குழுவின் ஒரு பகுதியாக கட்சியில் சேர அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அதனை ஏற்க பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். இவ்வாறு…

மேலும்...

காங்கிரசில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்?

புதுடெல்லி (29 ஜூலை 2021): தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிராசில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜூலை 22 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த சந்திப்பு நடைபெற்றது, மூத்த தலைவர்களான கமல்நாத், மல்லிகார்ஜூன் கார்கே, ஏ.கே. ஆண்டனி, அஜய் மேக்கன், ஆனந்த் சர்மா, ஹரிஷ் ராவத், அம்பிகா சோனி…

மேலும்...

மேற்கு வங்கத்தில் 200 இடங்களை பாஜக வெல்ல தவறினால் பாஜக தலைவர்கள் ராஜினாமா செய்ய தயாரா?

புதுடெல்லி (23 டிச 2020); : மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களை வெல்லத் தவறினால் ராஜினாமா செய்வோம் என்று எழுத்துப்பூர்வ உறுதி அளிக்குமாறு பிரசாந்த் கிஷோர் பாஜக தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளார். “வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 100 க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். பாஜகவின் வெற்றி அதற்கு மேல் இருந்தால் தான் ட்விட்டரில் இருந்து விலகுவேன்.” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில்…

மேலும்...

நிதிஷ் குமாரை கிண்டல் செய்துள்ள பிரசாந்த் கிஷோர்!

பாட்னா (17 நவ 2020): நடைபெற்ற பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அக்கூட்டனியில் இருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும், பாஜக 74 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும், பிகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக இன்று அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று அக்கட்சியை உறவாடி அழித்து விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது….

மேலும்...

திமுக ஒப்பந்தமிட்டுள்ள பிரசாந்த் கிஷோர் நிறுவனம் திடீர் மூடல்!

சென்னை (07 ஜூன் 2020): சென்னை, அண்ணா நகரில் உள்ள பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ அலுவலகம் திடீரென மூடப்பட்டு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் பணிகளுக்கு திட்டமிட, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் தி.மு.க. தலைமை ஒப்பந்தம் செய்தது. பிரசாந்த் தலைமையிலான ‘ஐபேக்’ நிறுவனத்தின் சார்பில் 234 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு களப்பணி துவக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் ‘ஒருங்கிணைவோம் வா’ செயல் திட்டத்தால், சில மாவட்ட செயலர்கள் மற்றும் அக்கட்சியின் தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்…

மேலும்...

டெல்லி வெற்றி திமுகவுக்கு உற்சாகம் – ஏன் தெரியுமா?

சென்னை (11 பிப் 2020): டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அசுர வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுகவுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு பரப்புரை உத்திகளை வகுத்து தரும் பிரஷாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு…

மேலும்...