புதுடெல்லி (29 ஜூலை 2021): தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிராசில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜூலை 22 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த சந்திப்பு நடைபெற்றது, மூத்த தலைவர்களான கமல்நாத், மல்லிகார்ஜூன் கார்கே, ஏ.கே. ஆண்டனி, அஜய் மேக்கன், ஆனந்த் சர்மா, ஹரிஷ் ராவத், அம்பிகா சோனி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் இது குறித்து விவாதித்தனர்.
தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் கட்சியின் விஷயங்களுக்கு பொருந்துவரா? என விவாதிக்கப்பட்டது.
ஜூலை 22 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த சந்திப்பு நடைபெற்றது, மூத்த தலைவர்களான கமல்நாத், மல்லிகார்ஜூன் கார்கே, ஏ.கே. ஆண்டனி, அஜய் மேக்கன், ஆனந்த் சர்மா, ஹரிஷ் ராவத், அம்பிகா சோனி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் இது குறித்து விவாதித்தனர்.
அண்மையில் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பு குறித்து ராகுல் காந்தி காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டதாக வட்டாரங்கள் இந்தியா டுடேவிடம் தெரிவித்தன. பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்காக தனக்கென ஒரு பங்கைக் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்ததாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு மூத்த தலைவர், ராகுல் காந்தி வெளியில் இருந்து ஒரு ஆலோசகராக இருப்பதை விட பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைந்து செயல்படலாம் என்கிற ஆலோசனையை வைத்துள்ளார். அதற்கான சாத்தியம் , இதனால் ஏற்ப்படும் நன்மை தீமைகள் பற்றி விவாதிக்கப்பட்டு பரிந்துரைகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர், 2014-ம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும், இப்போது மோதியின் அரசியல் எதிரியான மம்தா பானர்ஜிக்கும் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுகவிற்கும் ஆலோசனைகளை வங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.