தொற்றுநோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!
பாலஸ்தீன் (27 நவம்பர் 2023): கடந்த 50 நாட்களாக நிலவும் போர்ச் சூழலில், இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களால் அடியோடு நிலைகுலைந்து போயுள்ளது காஸா நகரம். இந்த போர்ச்சூழல், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நான்கு நாட்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. போர் பதட்டத்தின் காரணமாக காஸாவில் வசிக்கும் 17 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீன பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஏராளமான உயிர் இழப்புகளால், பிணங்களை ஒரே புதைகுழியில் அடக்கம் செய்து வருகின்றனர். இச்சூழலில், காஸா…