மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த இஸ்ரேலின் பொய் புகார்!

Share this News:

பாலஸ்தீன்(08 நவம்பர், 2023): பாலஸ்தீனில் உள்ள “ஷேக் ஹமத் பின் கலீஃபா” மருத்துவனைக் கட்டடத்தின் கீழ் பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கான சுரங்கப்பாதை உள்ளது என இஸ்ரேல் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இதனால், சமீபத்தில் இம் மருத்துவமனையும் இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளானது.

பாலஸ்தீன் – இஸ்ரேல் போர் காரணமாக, பாலஸ்தீன் காஸா பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ஐநா மையங்கள் ஆகியவற்றை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இன்று வரை பாலஸ்தீனில் 10,600 பொதுமக்கள் இறந்துள்ளனர். இவர்களில் 4,000 பேருக்கு மேல் குழந்தைகளாவர்.

https://x.com/AJEnglish/status/1721940876811727065?s=20

கத்தர் நாட்டு அரசு நிதியின் மூலம், கடந்த 2019 இல் பாலஸ்தீனில் கட்டப்பட்டது “ஷேக் ஹமத் பின் கலீஃபா” மருத்துவமனை ஆகும்.

இந்த மருத்துவமனை பற்றிய இஸ்ரேலின் பாரதூரமான இக்குற்றச்சாட்டிற்கு கத்தார் பெரும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அல் ஜஸீரா (Al Jazeera) வின் உண்மை அறியும் விசாரணை நிறுவனமான சனத், மருத்துவமனை கட்டுமானத்தின் செயற்கைக்கோள் காட்சிகள், ஆவணங்கள் மற்றும் துல்லியமான ஆதாரங்களை சர்வதேச மீடியாக்கள் முன் சமர்ப்பித்து, இஸ்ரேலின் கூற்றைப் பொய்யாக்கி உள்ளது.

உண்மை அறியும் விசாரணையில், நிலத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்த் தொட்டி (Underground water tank)  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான நீர் தேவைக்காகவும், மைதானத்திற்கு தண்ணீர் பாய்ச்சவும், அவசரகாலத்திற்கு தேவையான இருப்பு நீர் ஆதாரமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. (இந்நேரம்.காம்)

இதன் மூலம், மீண்டும் இஸ்ரேலின் இராணுவம் வெளியிட்ட காணொளி பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே பொய் காரணத்தைக் கூறி பாலஸ்தீனில் பல்வேறு மருத்துவமனைகளை இஸ்ரேல் தாக்கி அழித்து வருவது குறிப்பிடத் தக்கது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

Share this News: