போலீஸ் வன்முறையால் 83 வயது முதியவர் படுகாயம் – கண்பார்வை இழப்பு!

சேலம் (18 ஆக 2020): சேலத்தில், விசாரணை என்ற பெயரில் லட்டியால் கண்மூடித்தனமாக தாக்கியதில், 83 வயது முதியவரின் கை முறிந்துள்ளது மேலும் அவருடைய மகனுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது,. சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள அரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (83). இவருடைய மகன் ராஜூ (53). இவர்களுக்கு அதே பகுதியில் 2.60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் அனுபவ பாத்தியதையில் இருந்து வருகிறது. இவர்களது நிலம் அருகே, உத்தமசோழபுரம் ஊராட்சி…

மேலும்...

சென்னை வண்ணாரபேட்டையில் நடந்தது என்ன? – ஜவாஹிருல்லா அறிக்கை!

சென்னை (14 பிப் 2020): சென்னை வண்ணாரப் பேட்டையில் போராடியவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு ம.ம.க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று வடசென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக அமைதியான முறையில் போராடியவர்கள்மீது காவல்துறை கொடூரமான கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் சாஹின் பாக் பாணியில் 167 இடங்களில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு…

மேலும்...