டெல்லி பெண் போலீஸ் படுகொலையில் திடுக்கிடும் தகவல்!
புதுடெல்லி (08 பிப் 2020): டெல்லியில் பெண் போலீஸ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரை சக அதிகாரியே கொலை செய்ததோடு அவரும் தற்கொலை செய்து கொண்ட திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் ப்ரீத்தி (28). நேற்று இரவு ரோஹினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்….