டெல்லி பெண் போலீஸ் படுகொலையில் திடுக்கிடும் தகவல்!

Share this News:

புதுடெல்லி (08 பிப் 2020): டெல்லியில் பெண் போலீஸ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரை சக அதிகாரியே கொலை செய்ததோடு அவரும் தற்கொலை செய்து கொண்ட திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியின் பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் ப்ரீத்தி (28). நேற்று இரவு ரோஹினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட தகவலின்படி, ப்ரீத்தி இரவு 9.30 மணியளவில் ரோகிணி கிழக்கு மெட்ரோ நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் வந்து, துப்பாக்கியால் அவரது தலையில் சுட்டு தப்பிச்சென்றதாக தெரியவந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து இந்த கொலையில் ஈடுபட்டது யாரென்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த கொலையை செய்தது, ப்ரீத்தியுடன் வேலை பார்க்கும் சக உதவி ஆய்வாளர் தீபன்ஷு என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு, சுங்கச்சாவடி ஒன்றின் அருகே காரில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தீபன்ஷு உடல் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த கொலைக்கு ஒருதலை காதல் காரணமாக இருக்கக் கூடும் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply